"குயின்" இணைய தொடர், ஜெ.தீபாவிற்கு எந்த உரிமையும் இல்லை - கௌதம் மேனன்

0 2743

"குயின்" இணைய தொடருக்கு தடை கோர ஜெ.தீபாவிற்கு எந்த உரிமையும் இல்லை என, திரைப்பட இயக்குநர் கௌதம் மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குயின் தொடர் உண்மை சம்பவங்களை கொண்டு வெளியான, தி குயின் என்ற புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக கௌதம் மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரை சந்திக்க கூட அனுமதிக்கப்படாத ஜெ.தீபா, தற்போது உள்நோக்கத்துடன் தொடர்ந்திருக்கும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments